Wednesday, January 17, 2018

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 101-வது பிறந்தநாள், நடிகர் சங்கம் மரியாதை

புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 101-வது பிறந்தநாள், நடிகர் சங்கம் மரியாதை .



புரட்சி தலைவர் 'பாரத் ரத்னா " எம். ஜி. ஆர் அவர்களது 101-வது பிறந்த நாள் நாடெங்கும் ரசிகர்களால் இன்று கொண்டாப்பட்டது . இதை ஓட்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக ,சங்க வளாகத்தில் அவரது புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, காஜா மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு நடிகர் விஷால் மரியாதை

புரட்சி தலைவர் 'பாரத ரத்னா " எம்.ஜி.ஆர் அவர்களது 101-வது பிறந்த நாள் விழா நாடெங்கும் ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்ட்டு வருகிறது . இதையொட்டி சண்டைகோழி-2 படப்பிடிப்பில், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால் புரட்சி தலைவரின் புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், அவரை தொடந்து இயக்குனர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண் மற்றும் படக்குழவினர்கள் கலந்துக்கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கம்

No comments:

Post a Comment