Friday, January 19, 2018

10 வயது தங்கையை தத்தெடுத்த அபி சரவணன்!

அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற பாலமேடு கிராமத்தில் கடந்த ஜன-15 மாட்டுப்பொங்கலன்று ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த நிகழ்வின்போது அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்களை நோக்கி ஆவேசமாக சீறிப் பாய்ந்த ஒரு காளை முட்டியதில் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து(19) என்பவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தார்.



இறுதி சடங்கிற்கு ஆதரவு தரவேண்டிய ஜல்லிக்கட்டு பேரவையோ விழா கமிட்டியோ அல்லது லட்சகணக்கில் கார் பைக் தங்க வெள்ளி நாணயங்களை பரிசாக தந்த உபயதார்களோ அவரது உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியை கூடு செய்து தர முன்வரவில்லை என்பதுதான் கொடுமை. இந்தநிலையில் உடலை போஸ்ட்மாடர்ம் செய்து உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு சில அரசு மருத்துவ ஊழியர்கள் லஞ்சம் கேட்ட அவலமும் நடந்தது.



இந்தநிலையில் அதே தினம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை கொண்டாடிக்கொண்டு இருந்த நடிகர் அபிசரவணன் இந்த செய்தியை கேள்விப்பட்டு உடனடி காளிமுத்துவின் இறுதிச்சடங்கிற்கான உதவியாக ஜந்தாயிரம் ருபாயை நேரில் சென்று தந்துவிட்டு, மறைந்த காளிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினார்.



மேலும் தனது அண்ணனை இழந்து படிப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியான நிலையில் உள்ள காளிமுத்துவின் தங்கை பத்து வயது சிறுமிக்கு இனி அண்ணன் ஸ்தானத்தில் இருந்து அவளின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டு படிப்பை தொடர உதவுவேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அபிசரவணன்.



இதற்குமுன் விவசாயிகள் போராட்டத்தின்போது டெல்லியிலேயே தங்கி அவர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் அபிசரவணன், தற்கொலை செய்துகொண்ட சில விவசாயிகளின் குடும்பங்களுக்கும் தன்னால் இயன்ற உதவியை செய்ததுடன், மற்ற சில நல்ல உள்ளங்களிடமும் இருந்து அவர்களது வாழ்வாதாரத்திற்கான நிதி உதவியையும் பெற்று தந்துள்ளார் தொடர்ந்து இதுபோன்று தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்துவரும் வளர்ந்து வரும் நடிகரான அபிசரவணனின் மனிதாபிமானம் போற்றுதலுக்குரியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

No comments:

Post a Comment