Tuesday, January 23, 2018

ராணி முகர்ஜி தனது ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப் படுத்த உள்ளார்.

ராணி முகர்ஜி தனது ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப் படுத்த உள்ளார்.
ராணி ஹிச்சி திரைப்படத்தின் மூலம் சமூகத்திற்க்கு மிகமுக்கிய கருத்தினை தெரிவிக்க உள்ளார்.இப்படத்தின் விளம்பரம் மற்றும் ரிலீஸை 5 மொழிகளில் செய்யது இப்படத்தினை அதிகமாக மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார்.



ராணி முடிந்தவரை ஹிச்சி திரைப்டத்தை அதிக மக்களிடையே கொண்டு செல்ல மராத்தி,பெங்காலி,பஞ்ஞாசாபி,ஹிந்தி மற்றும் போஜ்புரி போன்ற 5 வித்யாசமான மொழிகளில் படத்தினை ரிலீஸ் செய்யவுள்ளார்.மேலும் தொலைக்காட்சி மூலமும் விளம்பரத்தை தொடங்கி இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார்.




"தனக்கு ஹிச்சி திரைப்படத்தின் கதை ஒரு நடிகையாகவும் மற்றும் பொதுமக்கள் நிலையிலும் வைத்து பார்க்கும்போது மிகவும் விரும்ப வைத்துள்ளது.முடிந்தவரை இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல முயற்ச்சிப்பேன் " ராணி கூறியுள்ளார்.ராணி அவர்கள் ஹிச்சி திரைப்படம் சமூக பாகுபாடு, சமூக பழக்கவழக்கம் போன்ற
கருத்துக்கள் தரும் என்று அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.இத்திரைபடத்தின் கதையும், கதைக்கருவும் மக்களுக்கு பலவீனத்தை குறைத்து வாழ்க்கையில் முன்னேறும் பல நல்ல செய்திகளை தரும் எனவும் கூறியுள்ளார் . வாழ்க்கைக்கு தேவையான குறிக்கோள்களையும் ,நெறிமுறைகளையும் ஹிச்சி திரைப்பபட விளம்பரத்தில் தெரிவிக்க உள்ளார்.




ராணி முகர்ஜி இத்திரைப்படத்தில் ஒரு நரம்பு மண்டல கோளாறு, டூரெட்ஸ் நோய்க்குறியைக் கொண்டிருக்கும் "நினா மாதுர் "எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படி உள்ள நிலைமையிலும் வாழ்க்கையில் எப்படி போராடி வெல்ல வேண்டுமென்ற நல்லக்கருத்தை இத்திரைப்படம் தெரிவிக்கவுள்ளது.
ஹிச்சி திரைப்படம் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தரும் படமாக அமையும். இப்படம் மக்களுக்கு அவர்களது பலவீனத்தை எடுத்துச்சொல்லி வாழ்கையில் முன்னேறும் பல கருத்துக்களை விளக்கவுள்து .சமூக பாகுபாடு, சமூக ஏற்றத்தாழ்வு,சமூக பலக்கவழக்கம் போன்றவற்றை எடுத்துக்கூறி வாழ்க்கையில் முன்னேற்றமடைய தேவையான முக்கிய அம்சங்களை இப்படம் கொண்டுள்ளது.




இத்திரைப்படத்தை சித்தார்த் P. மல்ஹோத்ரா இயக்கி , மனீஷ் ஷர்மா தயாரித்துள்ளார்.



ஹிச்சி திரைப்படம் பிப்ரவரி 23 அன்று வெளியிடப்பட உள்ளது.

No comments:

Post a Comment