9வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நேற்று 24.01.2018 தொடங்கியது. இரண்டு இலட்சத்து இருபத்து ஓராயிரம் சதுர அடியில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள், கலை நிகழ்ச்சிகளுக்கான அரங்கு என மிக பிரம்மாண்டமான முறையில் கண்காட்சி தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கானோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
நாளை 25.01.2018 வியாழக்கிழமையன்று ‘பெற்றோர், பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதல் என்ற கருத்தின் அடிப்படையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. காலை 10 மணி முதல் ஒரு மணி வரை பண்புப் பயிற்சிகள் நடக்க உள்ளன.
முதல் பண்புப் பயிற்சி ‘மாத்ரு-பித்ரு & அதிதி வந்தனம்’. இளம்தலை முறையினரை தங்கள் தாய் தந்தையரை வணங்கச்செய்தல்.
அடுத்தது ஆச்சார்ய வந்தனம். இதில் தேசிய விருது பெற்ற தமிழாசிரியர் திரு நல்லாமூர் கோ. பெரியண்ணன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்படுகிறது.
ஆச்சார்ய வந்தனத்தின் சிறப்பு அம்சமாக தமிழகத்தின் முக்கிய ஆதீனங்கள் கலந்து கொள்கின்றனர்.
(1) மயிலம் பொம்மபுர ஆதீனம்
(2) சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள்
(3) செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
(4) துழாவூர் ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ நிரம்ப அழகிய ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்
(5) திலகவதியார் திருவருள் ஆதீனம் தயானந்த சந்திரசேகர சுவாமிகள்
(6) பாலமதி ஆதீனம் இராமகிருஷ்ண சாது
(7) திருவலம் சர்வ மங்களா பீடம் சாந்தா சுவாமிகள்
(8) சூர்யனார் கோயில் ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள்
(9) சிதம்பரம் மௌன மடம் ஸ்ரீ ல ஸ்ரீ மௌன சந்தரமூர்த்தி சுவாமிகள்
(10) திருவாவடுதுறை ஆதீனம்
(11) விருத்தாசலம் குமாரதேவர் மடம்
(12) தண்டபாணி சுவாமிகள் மடம் தண்டபாணி ஐயா
(13) உளுந்தூர்பேட்டை அப்பர் சுவாமிகள் மடம்
(14) திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் திருநாவுக்கரசு சுவாமிகள்
முதலியோர் கலந்துகொள்கின்றனர்.
ரெட்டியார் மற்றும் கவரா நாயுடு சமூகத்தினர் இந்த நிகழ்வை நடத்துகின்றனர்.
மாலையில் யக்க்ஷகானம், கூர்க் மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கர்நாடக மாநில கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்ச்சிக்கு தங்கள் நிறுவனத்திலிருந்து செய்தியாளரை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
ஆறு. அண்ணல், செய்தித் தொடர்பாளர், செல்: 93810 39035
No comments:
Post a Comment