Wednesday, January 31, 2018

ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.



கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் ’காங்’ சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியிருக்கிறது.

இப்படத்தின் முதல் நாள் படபிடிப்பு இன்று பாண்டிசேரியில் பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் தாய்லாந்தில் படபிடிப்பு தொடரவிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.



கோடை விடுமுறையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ‘கொரில்லா ’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment: