Wednesday, January 17, 2018

விவசாயத்தையும் விவசாயிகளை கொண்டாடுவதற்காகவும் உருவாக்கப்பட்ட "தலைவணங்காதே தமிழா"

"தலைவணங்காதே தமிழா" பாடல் பொங்கல் அன்று விவசாயத்தையும் விவசாயிகளைக் கொண்டாடுவதற்காகவும் வெளியிட்டுள்ளனர். இப்பாடலை தயாரித்து இசையமைத்து வெளியிட்டவர் இசையமைப்பாளர் அருண்ராஜ்



திரைப்பட நடிகர்களான திரு. அருண்விஜய், திரு. சமுத்திரக்கனி, திரு. Rj. பாலாஜி, ஆகியோர் இந்தப் பாடலை வெளியிட்டு விவசாயிகளுக்கு தங்களின் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.



இசையமைப்பாளர் அருண்ராஜ் பாடல் உருவானதைப் பற்றி கூறுகையில் '' நெடுவாசலில் நடந்த போராட்டத்தில் நானும் கலந்து கொண்டபோது தான் போராட்டத்தின் நிலையும் விவசாயிகளின் பக்கம் உள்ள உண்மையும் தன்னை இந்தப் பாடலை உருவாக்கவழிவகுத்தது.

இந்தப்பாடல் தந்தை மகனைப் பற்றிய அழகிய வாழ்வியல் கதை தொகுப்பு, அவர்களின் தினசரி வாழ்க்கையும் அதில் அவர்கள் சந்திக்கும் கடன் சுமைகளும் மற்றும் பலபிரச்சனைகள் தற்கொலை முடிவுக்கு கொண்டுசெல்கிறது, பாடலின் முடிவில் நம்பிக்கை தரும்படியான காட்சி அமைக்கப்பட்டுள்ளது.



இந்தப்பாடல் நம்நாட்டின் விவசாயிகளின் பிரச்சனைகளை பேசும்படியாக எடுக்கப்பட்டுள்ளது.



காவேரி டெல்டா தமிழ்நாட்டின் மிகமுக்கிய பொக்கிஷம், அதை இளைஞர்களான நாம் அனைவரும் காப்பாற்றவேண்டும், ஏனென்றால் இது மிகமுக்கியமான ஒன்று மற்றும் மீண்டும் உருவாக்க முடியாத இயற்கைவளம்.



மேலும் இது அடுத்தசந்ததியினருக்கு தேவை என்பதும் விவசாயத்தை அவர்கள் எடுத்து நடத்த வேண்டும் உணரவும் வேண்டும்." என்றார்.



இளம் இசையமைப்பாளர்அருண்ராஜ், ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர் குமார் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் "தடம்" படத்தின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment