Thursday, February 15, 2018

மும்பை வில்லன்களுடன் பிரபுதேவா மோதல் சார்லி சாப்ளின் - 2 படத்திற்காக படமானது

தமிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனங்களில் ஒன்று T.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ். அம்மா கிரியேசன்ஸ் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி படத்தை தொடர்ந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு சார்லி சாப்ளின் -2 என்று பெயரிட்டுள்ளனர்.



பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதாஷர்மா இருவரும் நடிக்கிறார்கள். பிரபல இந்தி தெலுங்கு நடிகையான அதாஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. மற்றும் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், விவேக் பிரசன்னா, சாம்ஸ், சாந்தா, காவ்யா, மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, அமீத், நட்புக்காக வைபவ்.



ஒளிப்பதிவு - செளந்தர்ராஜன் / இசை - அம்ரீஷ் / பாடல்கள் - யுகபாரதி, பிரபுதேவா



கலை - ஆர்.கே.விஜய்முருகன் / நடனம் - ஜானி / எடிட்டிங் - பென்னி



வசனம் - கிரேஸி மோகன் / ஸ்டன்ட் - கனல்கண்ணன்



தயாரிப்பு - T.சிவா



கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஷக்தி சிதம்பரம்.



படம் பற்றி இயக்குனர் ஷக்திசிதம்பரம் கூறியது…



முழுக்க முழுக்க கமர்ஷியல் காமெடி படமாக சார்லி சாப்ளின் உருவாகி வருகிறது. இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் பிரபுதேவா, மகதீரா வில்லன் தேவ்கில் இருவரும் மோதும் பயங்கர சண்டைக் காட்சி படமாக்கப் பட்டது. அத்துடன் பிரபுதேவா – சமீர் கோச் இருவரும் மோதும் சூட்கேஸ் சண்டைக் காட்சி ஒன்றும் அங்கேயே பிரமாண்டமாக படமாக்கப் பட்டது.



மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப் பட்டு இரண்டு சண்டைக் காட்சிகளும் படமாக்கப் பட்டது.

No comments:

Post a Comment