Sunday, September 24, 2017

சென்சாரில் உள்ள பெண் அதிகாரிகள் "ஜாலியா இருந்தது" என்று ரசித்து பாராட்டிய "ஹர ஹர மஹாதேவகி"!

ஹர ஹர மகாதேவகி திரைப்படத்தின் இயக்குனர் அளித்த பேட்டியில் " ஹர ஹர மகாதேவகி திரைப்படத்தை வரும் செப்டம்பர்-29ல் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.18வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய பொழுதுபோக்கான காமெடி படம். "ஏ"சான்று பெற்றப்படம் எனவே குடும்பதோடு பார்ப்பது அவரவர் விருப்பம். புதுமையான ஒன்றை இப்படத்தில் முயர்ச்சித்துள்ளோம். முத்தக்காட்சி,கவர்ச்சி உடை அணிவது ஆபாசம். நண்பர்களால் பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாக பேசிக்கொள்வதுதான் இப்படத்தின் கதை. இப்படத்தை விருப்பமானவர்களோடு சந்தோசமாக பார்க்கலாம். இயல்பு வாழ்க்கையை படமாக்கப்பட்டதால் இப்படத்தின் விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் கவலையில்லை. இப்படத்தை பார்த்து மக்கள் கெட்டு போவார்கள் என எனக்கு தோனவில்லை. ட்ரைலரை பார்த்தே இரட்டை வசனத்துடன் மிகவும் ஜாலியா இருக்கு என பலர் கூறினர், அதன் தொடர்ச்சியாகவே முழுவதும் இருக்கும்.அதை தவிர்த்து வேறு எந்த தப்பான காட்சியும் இதில் இருக்காது. இப்படத்தின் கதை பற்றி கூற வேண்டுமானால் கௌதம் புதுமையான தொழில் மேற்கொள்கிறார். நிக்கி கல்லூரி மாணவி இரண்டு பேரும் ஒரு நாள் காலை தங்கள் காதலை பிரேக்கப் பண்றாங்க அப்போ யாரையெல்ல
ாம் சந்திக்காங்க அவங்களுக்கு என்னலாம் நடக்கு, முதல் பாதி காதல் இரண்டாம் பாதி ஏன் பிரேக்கப் என்று பரபரப்பாக கதை நகரும். ஹர ஹர மஹாதேவகி என்ற விடுதியில் நடப்பது தான் கதை எனவே அதையே படத்தோட பெயரா வச்சிட்டோம். சென்சார்லயும் "ஏ"க்கு அனுமதி கொடுக்கும் அளவுக்கு படத்தை எடுத்திருந்தோம் . சென்சார்லயும் பெண் அதிகாரிகளும் பார்த்துட்டு நல்லா ஜாலியா இருக்குன்னுதான் சொன்னாங்க. மற்றபடி படத்தில் ஒரு கருத்தும் கிடையாது. தங்கராஜ் சார்கிட்ட கதை சொன்னோம் அருக்கு பிடிச்சிருந்தது. 18 பேர்க்கு அப்புறம் கௌதம் தான் இதை படமா கதையா பார்த்தாரு கார்த்திக் சாரோட உள்ளத்தை அள்ளித்தா மாதிரி இருக்குனு கௌதம் பீல் பண்ணாரு. இருட்டு அறையில் முரட்டு குத்து என்பது ஒரு பேய் படம் கதைக்கு ஏத்தா மாதிரி தலைப்பு வைத்துள்ளோம். அதில் எந்த தவறும் இல்லை. நான் சரவணன் சார்கிட்ட உதவி இயக்குனரா இருந்தேன். கண்டிப்பா படத்துக்கு பெண்களும் வருவாங்க.படத்தோட பூஜையப்போம் கார்த்திக் சார்கிட்ட இருந்து வாழ்த்து வந்ததா கௌதம் சொன்னார் அதுவே பெரிய விஷியம்தானே" என்று கூறினார்...



கௌதம்கார்த்தி உட்பட 18 ஹீரோகளுக்கு இப்படத்தின் கதையை நான் கூறியுள்ளேன். அவர்கள் அனைவருக்கும் இந்த கதை பிடிக்கவில்லை என்று கூற முடியாது... ஆனால் அவர்கள் அனைவரும் வெவ்வேறு விதமான கதைகளை எதிர்பார்த்து இருந்ததால் அவர்களால் இந்த கதையில் நடிக்க முடியவில்லை.

நிக்கி கல்ராணி பேசியது :-



என்னுடைய எல்லா படத்தையும் போல இதுவும் நல்ல படம் தான். இந்த படத்தை பற்றி ஏன் அதிக பேச்சு வருகிறது என்றால் இந்த படம் ஒரு “ அடல்ட் காமெடி “ படம். இந்த படத்தை மக்களுக்கான ஒரு பொழுதுபோக்கு படமாக தான் நாங்கள் பார்க்கிறோம். இந்த படத்தில் நாங்கள் வேண்டுமென்றே டபுள் மீனிங் வசனங்கள் எதையும் வைக்கவில்லை. படத்தில் டபுள் மீனிங் வசனங்கள் சந்தர்ப்ப சூழ்நிலையில் வருவது போல் தான் இருக்கும். இந்த படத்தின் கதையை கேட்டு எனக்கு கதை பிடித்திருந்ததால் தான் நடித்தேன். இந்த படத்தில் யாரையும் தப்பாக காட்டுவது போல் காட்சிகள் இல்லை. வல்காரிட்டி இல்லாமல் இந்த படத்தை நாங்கள் எடுத்துள்ளோம். நாங்கள் படத்தை கூட அடல்ட் காமெடி என்று தான் ப்ரொமோட் செய்கிறோம். நான் ஸ்வீட் பப்ளி காலேஜ் பெண்ணாக நடித்துள்ளேன். என்னை தப்பாக காட்டும் ஒரு படத்தில் நானே நடிக்க மாட்டேன். இந்த படத்தில் அப்படிபட்ட காட்சிகள் ஏதும் இல்லை. இந்த படத்தில் தேவையில்லாமல் அடல்ட் காமெடி எதுவும் இல்லை.

கௌதம் கார்த்திக் பேசியது :-



நான் ஹரஹர மஹாதேவகி படத்தின் கதையை கதையாக தான் பார்த்தேன். இது முழுமையான காமெடி என்டர்டெய்னர். ஒரு இடத்தில் நான்கு நண்பர்கள் கூடினால் அவர்களுக்குள் எப்படி பேசிக்கொள்வார்களோ அதே போல் தான் இப்படத்தில் காட்சிகள் இருக்கும். இந்த படத்தை ஏன் குடும்பத்தோடு பார்க்ககூடாது என்று சொல்கிறோம் என்றால் , நாம் நம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளும் சில விஷயத்தை குடும்பத்தினர் முன்பு கண்டிப்பாக பேசமாட்டோம்... அதனால் தான் இந்த படத்தை அடல்ட்ஸ் ஒன்லி படம் என்று சொல்கிறோம். நான் ஹரஹர மஹாதேவகியையும் , இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தையும் யூத் ஆடியன்ஸ் அனைவரையும் மனதில் வைத்து தான் தேர்ந்தெடுத்து நடித்துள்ளேன். இந்த இரண்டு படங்களில் நடிப்பது கண்டிப்பாக ஸ்டீரியோ டைப் ஆகாது என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் நிறைய கதைகளில் நடித்துள்ளேன் அதை போல் தான் இந்த படமும். படத்தின் கதையை கேட்டு அப்பா சிரித்தார். இந்த படம் அடல்ட் காமெடி தான் , செக்ஸ்வல் காமெடி இல்லை. இங்கே யாருக்கும் அடல்ட் காமெடி பற்றிய சரியான புரிதல் இல்லை. ஹரஹர மஹாதேவகி இளைஞர்கள் ரசிக்கும் படமாக இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment