Tuesday, September 19, 2017

மூன்று நாட்களுக்குள் 3000 பேருக்கு பட்டு சேலை!

மகளிர் மட்டும் கடந்த வெளிக்கிழமை வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. மகளிர் மட்டும் வெளியான முதல் மூன்று நாட்களுக்குள் படம் பார்த்த 3000 பேருக்கு பட்டு சேலை பரிசாக வழங்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்துவிட்டு பெண்கள் தங்கள் தோழிகளை பேஸ்புக்கில் தேடி வருகிறார்கள். பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் தங்கள் நண்பர்களை பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தேடி வருகிறார்கள். தரமான படத்தை தயாரித்துள்ளதாக சூர்யா மற்றும் 2D Entertainment நிறுவனத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அதே போல் மகளிர்மட்டும் போன்ற நல்ல படங்களை 2D நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் கோரிக்கை வைத்தும் உள்ளனர்.



மகளிர்மட்டும் போன்ற தரமான படத்தை தயாரித்ததற்காக சூர்யா மற்றும் 2D Entertainment நிறுவனம் மகிழ்ச்சியாக உள்ளது. மகளிர்மட்டும் போன்ற நல்ல கதைகள் அமைந்தால் அடுத்த ஒரு தரமான படத்தை தயாரிக்கலாம் என்று எதிர்பார்த்துள்ளது 2D Entertainment நிறுவனம்.



மற்றும் பத்திரிகையாளர் வினிசர்பனாவின் விமர்சனம்:



ஆண்கள் மட்டும்தான் பள்ளிக்கல்லூரி கால நண்பர்களையும் காதலியையும் நினைப்பார்கள்...தேடிப்போவார்கள் என்று ஆண்களின் ஃப்ளாஷ் பேக்கை மட்டுமே காட்டிய அழகி, ஆட்டோகிராஃப், பவர் பாண்டி டைப் படங்களுக்கு மத்தியில் பெண்களும் தங்கள் தோழிகளை காதலனை நினைப்பார்கள்... தேடிப்போவார்கள்... பெண்களுக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கிறது என்பதை உணர வைத்ததற்காக 'மகளிர் மட்டும்' பிடித்திருந்தது!



சாப்பாட்டில் முடி விழுந்தால் தட்டு பறக்கும் வீடுகள்தான் பெரும்பான்மையாக உள்ளன. பெண்கள் கஷ்டப்பட்டு சமைக்கும்போது சாப்பாட்டில் முடி விழத்தான் செய்யும். அதை, எடுத்துப்போட்டுவிட்டு சாப்பிடவேண்டும் என்று ஆண்களுக்கு உணர்த்தியதற்காக ரொம்ம்ம்ம்ம்ம்பவே மகளிர் மட்டும் பிடித்திருந்தது!



கான்வெண்ட் சிஸ்டர் தனது முடியை டையால் அலங்கரித்துக் கொண்டுவரும், அவர்களின் உள்ள ஆசைகளையும் மயிரிழையில் சொல்லிவிட்டுப்போவதாலும் மகளிர் மட்டும் பிடித்திருந்தது!



பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணத்தில் யாரென்றே தெரியாத ஒருவன்-ஒருத்தியுடன் திருமணம் என்ற பெயரில் பெற்றோரே இணையச் சொல்வதை கண்டித்ததற்காகவும் காதல் திருமணமே சிறந்தது என்றதற்காகவும் மகளிர் மட்டும் பிடித்திருந்தது!



பெண்களின் முன்னேற்றத்திற்கு குழந்தை பெற்றுக்கொள்வதும் தடையாக இருக்கிறது என்பதை துணிச்சலோடு சொன்னதற்காக மகளிர் மட்டும் பிடித்திருந்தது!



ஆணவப்படுகொலை செய்த சங்கர்- கெளசல்யா காதலை வாழ வைத்ததற்காவும், அதுபோன்ற சமயங்களில் பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது குறித்து விழிப்புணர்வூட்டியதற்காகவும் மகளிர் மட்டும் பிடித்திருந்தது!



கருப்பு உடையுடன் ஜோதிகா பெரியாரிய கருத்துகளை தைரியத்துடன் விதைத்ததால் மகளிர் மட்டும் பிடித்திருந்தது!



பஞ்சாயத்து தேர்தல்களில் பெண்களின் உரிமைகளைப் பறித்து கணவர்களே நிர்வகிக்கும் கொடுமையை வெளிச்சம் போட்டதற்காக மகளிர் மட்டும் பிடித்திருந்தது!



மாமியாரும் மருமகளும் எவ்வளவு ஃப்ரண்ட்லியாக இருக்கவேண்டும்... மனைவிகள் கணவனை நினைத்துக்கொண்டு பாக்ஸிங் செய்து உள்ள வேதனையை வெளிப்படுத்துவது...



ஆண்களும் வீட்டில் சமைக்கவேண்டும் என்றதற்காக மகளிர் மட்டும் பிடித்திருந்தது!



ஃப்ளாஷ்பேக்கில் வரும் சுப்பு, ராணி, கோமு மூன்று தோழிகளும் ஹார்ட்டில் ஆட்டோகிராஃப் போடுகிறார்கள்...



அவர்களது காட்சிகள் இன்னும் நீளாதா என்று ஏங்கவைத்ததற்காக மகளிர் மட்டும் பிடித்திருந்தது



வரதட்சணைக் கொடுக்காமல் தனக்குப் பிடித்தவரை தேர்ந்தெடுக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வியல்களை காட்டியதற்காக மகளிர் மட்டும் பிடித்திருந்தது



சொல்லவந்தக் கருத்துகளை பிரம்மாதமாய் வெளிப்படுத்தி நம் மனதில் பிரம்மாண்டமாய் நிற்கிறார் இயக்குனர் பிரம்மா @ Bramma Nathan



மகளிர் மட்டும்...மகளிருக்காக மட்டுமான படம் அல்ல!!!

No comments:

Post a Comment