Thursday, November 16, 2017

Vaikunda Ekadesi 2017-2018 Programme

View full details: Vaikunda Ekadesi 2017-18 Programme Book-1

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி – 620 006.



108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுந்தம், பெரியகோயில் என்றும் அழைக்கப்படுகிற ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் அனைத்து உற்சவங்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் (வைகுந்த ஏகாதசி-திருமொழி, திருவாய்மொழித் திருநாட்கள்) முக்கிய திருவிழா ஆகும். பகல்பத்து, இராப்பத்து, இயற்பா என்று 21 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் 19.12.2017 முதல் 07.01.2018 ஆகிய 20 நாட்கள் பெரிய பெருமாள் மூலவர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார். பகல்பத்து திருவிழாவின்போது



ஸ்ரீநம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், இராப்பத்து திருநாட்களில் திருமாமணி மண்டபத்தில் (ஆயிரங்கால் மண்டபம்) அனைத்து ஆழ்வார்கள், ஆச்சாரியார்களுடன் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பாகும். பகல்பத்து திருநாட்களின்போது திருமொழி பாசுரங்களும், இராப்பத்து திருநாட்களின்போது திருவாய்மொழி பாசுரங்களும் அபிநயம், வியாக்யானங்களுடன் அரையர்களால் சேவிக்கப்படும். பகல்பத்து திருநாளில் பத்தாம் திருநாள் ஸ்ரீநம்பெருமாள் மோகினி அலங்காரத்துடனும் வைகுந்த ஏகாதசியன்று ஸ்ரீநம்பெருமாள் ரத்ன அங்கியுடனும் பரமபதவாசல் வழியே வந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள்வார். இராப்பத்து எட்டாம் திருநாளில்



ஸ்ரீநம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேடுபறி கண்டருள்வார். இராப்பத்து சாற்றுமறை அன்று நடைபெறும் நம்மாழ்வார் மோட்சம் சேவிப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த உற்சவம் நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கும், ஆழ்வார்களுக்கும் ஏற்றமிகு உற்சவமாகி திருமங்கையாழ்வார் காலம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.



இந்த உற்சவத்திற்கு அனைவரும் பெருந்திரளாக வந்திருந்து, நம்பெருமாளை சேவித்து அருள்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேம்.

No comments:

Post a Comment