இயற்கையான அழகிற்கு மெருகு சேர்க்கும் வண்ணம், அறிய பல யுக்திகளை கையாண்டு பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் கூட, அழகிற்கு அழகு சேர்க்கும் பணியை பாங்குற, சீரிய முறையில் செய்து வரும் அழகு நிலயம்தான் Naturals.
புதியதொரு முயற்சியில் Naturals நிறுவனம் தற்போது இறங்கியுள்ளது!
சென்னை இந்திர நகரில், L. B. சாலையில் உள்ள Naturals நிறுவனத்தில், 70% உடல் ரீதியாக நலிவுற்றவர்களை வேலைக்கு அமர்த்தும் ஓர் உன்னத பணியை தொடங்கியுள்ளது! இதர பணியாளர்கள் 30% மட்டுமே!
50 வருடங்களுக்கு முன்னர், Martin Luther King Jr. என் கனவு என ஒரு சொற்பொழுவு ஆற்றினார். அதை போலே, எனக்கும் வீணாவிற்கும் ஒரு கனவு உண்டு! அதன் வெளிப்பாடுதான் இந்த முயற்சி என்கிறார், C. K. Kumaravel, Naturals நிறுவனத்தின் அதிபர்!
Youth4JobsFoundation என்கிற ஓர் அமைப்புடன் இணைந்து, Naturals இந்த முயற்சியில் இறங்கியுள்ளது!
611 கிளைகள் கொண்ட எங்களது Naturals குழாமில், இம்மாதிரி உடல் ரீதியாக நலிவுற்றவர்களை பணியில் அமர்த்துவதுதான் எங்களது குறிக்கோள் என மேலும் கூறுகிறார் Kumaravel!
இந்தியாவிலேயே , உடல் ரீதியாக நலிவுற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு நல்கும் ஒரு மாபெரும் நிறுவனமாக Youth4Jobs Foundation நிற்கும் இந்த வேளையிலே இம்மாதிரியான ஒரு பணியில் Naturals உடன் இணைவது குறித்து மகிழ்ச்சி, என்கிறார், அதன் அமைப்பாளர், Meera Shenoy!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவியான Mithali Raj இதனை துவக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது! உடல் ரீதியாக நலிவுற்றவர்களுக்கும் இம்மாதிரியான வேலை வாய்ப்புகள் நல்குவதேன்பது பாராட்டததக்க ஒரு முயற்சி என்கிறார் அவர்!
பெண்கள் கிரிக்கெட் உலகில் அதிக ரன்களை குவித்தவர் என்கிற பெருமை இவருக்கு உண்டு!ODI போட்டிகளில் 6000 ரன்களை இவர் குவித்து உள்ளார்!
No comments:
Post a Comment