Monday, March 12, 2018

நடிகர் அர்ஜுன் உறவினர் சிரஞ்சீவி சார்ஜா நடிக்கும் படம் "சீசர்"

க்ரைம் பின்னணியில் ஓர் அதிரடி ஆக்ஷன் படமாக 'சீசர் ' உருவாகியுள்ளது. இதில் சிரஞ்சீவி சார்ஜா , பாருல் யாதவ் , வி.ரவிச்சந்திரன் , பிரகாஷ்ராஜ் , நாகி நீடுநடித்துள்ளனர் .



'சீசர்' படத்தை எழுதி இயக்கியுள்ளார் வினய் கிருஷ்ணா .



படத்தை த்ருதி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.



படத்துக்கு ஒளிப்பதிவு -அஞ்சி மற்றும் ராஜேஷ் கட்டா , இசை - சாந்தன் ஷெட்டி , இணை தயாரிப்பு - வினய் கிருஷ்ணா.



'சீசர் 'படத்தின் படப்பிடிப்பு பெங்களூர் , மைசூர் என்று தொடங்கி உச்சக் கட்டக் காட்சி சபரிமலையில் நடந்து முடிந்துள்ளது. சபரிமலையில் இதுவரை அனுமதிகிடைத்திடாத பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.



குற்றப் பின்னணியில் பரபரப்பான க்ரைம் கதையில் அதிரடியாக ஆக்ஷன் காட்சிகளுடன் படம் உருவாகியுள்ளது.



தமிழகத் திரைகளில் விரைவில் வரவுள்ளது.



ஓர் அதிரடி ஆக்ஷன் அனுபவத்துக்குத் தயாராக இருங்கள்.

No comments:

Post a Comment