Monday, October 16, 2017

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக பல ஆச்சர்யங்களை அளிக்கவிருக்கும் பிரபாஸ்

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக பல ஆச்சர்யங்களை அளிக்கவிருக்கும் பிரபாஸ்



பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் மிகுந்த எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ள "சாஹோ" படத்தில் நடித்து வருகிறார்.



சாஹோ படத்திற்காக சற்றே தனது உடலை இளைத்து மிகவும் வசிகரமான தோற்றத்தில் நடிக்கும் பிரபாஸ்ஸின் பிறந்தநாள் வரும் அக்டோபர் மாதம் 23ம் தேதி வருகிறது.



தனது படங்களுக்கு ஆதரவையும் அன்பையும் பொழிந்த ரசிகர்களுக்குப் பிறந்தநாள் பரிசாக தொடர்ந்து பல ஆச்சர்யங்களை அளிக்கவுள்ளார் நடிகர் பிரபாஸ்.



சாஹோ படத்தின் பிரத்யேக பிரபாஸ் படங்கள் அக்டோபர் 22ம் தேதி இரவு வெளியாகவுள்ளது, அதைத் தொடர்ந்து பிரபாஸ் பிறந்தநாளில் சாஹோ படம் உருவான விடியோ, சாஹோ பட போஸ்டர்கள், மேலும் ரசிகர்களுக்காகத் தனது பிரத்யேக விடியோ ஒன்றையும் வெளியிடவுள்ளார்.



சாஹோ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்த தருவாயில், இப்படத்தின் முக்கிய சண்டைக்காட்சிக்காக அடுத்தமாதம் படக்குழு துபாய் செல்லவுள்ளது. இந்தப் பிரம்மாண்ட சண்டைக்காட்சி பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் கென்னி பேட்ஸ் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment