Sunday, January 28, 2018

சி.ஏ. படிப்பில் ஜெயிப்பது சிம்பிள், ஸ்ரீ சங்கரா கோச்சிங் சென்டர் ஆடிட்டர் நாகராஜன்!

இன்று சார்ட்டட் அக்கவுண்டன்ட்டுகளின் தேவை அதிகரித்து வருகிறது!



மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் ஜி எஸ் டி வரி நடைமுறைக்குப் பிறகு சார்ட்டட் அக்கவுண்டன்ட்டுகளின் தேவை அதிகரித்து இருப்பதாக ஸ்ரீ சங்கரா கோச்சிங் சென்டர் (Sri Sankara coaching center) என்ற பயிற்சி நிறுவனரும், ஆடிட்டருமான நாகராஜன் கூறுகிறார்.



அவரிடம் சி.ஏ. படிப்பு சார்ந்த சில கேள்விகளைக் கேட்டோம்.



பொதுவாகவே சிஏ படிப்பு என்பது மிகவும் கடினம் என்கிற கருத்து உள்ளதே?



இந்த சிஏ படிப்பு பற்றிய அச்சம் மாணவர்களிடம் இருக்கிறது. அது தேவையில்லாதது. அது புரிதல் இல்லாததால் வருகிற தவறான எண்ணமும் கூட.



சி.ஏ பாஸ் செய்வது வெரி சிம்பிள். அதற்காக ஆகும் செலவும் சாதாரண வகையிலான செலவுதான். தமிழ்நாட்டில் ஒரு பிளாட்பாரத்தில் கீரை வியாபாரம் செய்யும் ஏழைப் பெண்மணியின் மகள் கூட சி.ஏ. பாஸ் செய்து ஒரு பெரிய கம்பெனியில் நல்ல நிலையில் இருக்கிறார்.



இரண்டு ஆண்டுகள் முன்பு மும்பையில் ஒரு ஆட்டோக்காரரின் மகள் சி.ஏ. முடித்து இன்று பெரிய அளவில் இருக்கிறார்.



சி.ஏ படிப்பு கடினம் என்கிறார்களே ? கடினமா? சுலபமா?



அதன் அடிப்படையைப் புரிந்து கொண்டால் சுலபம். சரியான தயாரிப் போடு தேர்வை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் மனப்பாடக் கல்வி முறை போன்றதல்ல இந்தப் படிப்பு . அடிப்படையை ,கான்சப்டைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். புரிந்து கொண்டு விட்டால் எல்லாம் சுலபம். எப்படி 10 ஆம் வகுப்பு படித்து விட்டு ப்ளஸ் டூ தேர்வு எழுத முடியாதோ அது போல தயாராக இல்லாமல் தேர்வை எழுத முடியாது.



இதற்குரிய படிப்பின் நிலைகள் என்னென்ன?



சி.ஏ. படிப்பில் மூன்று நிலைகள் உள்ளன. 1பவுண்டேஷன், 2. இன்டர் மீடியட், 3 பைனல் என 3 வகைப்படும்.



அதாவது அடிப்படை நிலை, இடைநிலை , இறுதி நிலை என்று மூன்று நிலைகள் உள்ளன.



ப்ளஸ் டூ முடித்த எவரும் அடிப்படை நிலைத் தேர்வுகளை எழுதலாம் .பட்டப் படிப்பு முடித்தவர்கள் இன்டர்மீடியட் எழுதலாம் .



மூன்றாம் நிலையின் போது ஒரு ஆடிட்டரிடம் பணியாற்றி செயல்முறை அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் .இந்தச் செய்முறை அனுபவம் இருந்தால் தான் மூன்றாம் நிலைத் தேர்வுகளை வெற்றிகரமாக எழுத முடியும்.



இதற்கு ப்ளஸ்டூ வில் மதிப்பெண் அதிகம் எடுக்க வேண்டுமா ?



ப்ளஸ் டூ மதிப்பெண்ணைப் பொறுத்தவரை மருத்துவம் , பொறியியல் படிப்புக்கு இருப்பதைப் போல மதிப்பெண் முன்னுரிமை இங்கு தேவையில்லை. அதற்குரிய நீட் , ஐ ஐடி தேர்வுகள் எதுவும் சி.ஏ.க்குத் தேவையில்லை. ப்ளஸ் டூவில் 40 சதவிகிதம் மதிப்பெண் எடுத்தவர்கள் கூட சி.ஏ படிக்க முடியும்.



முயற்சியும் பயிற்சியும் மட்டும் இருந்தால் போதும்..



படிக்கும் மொழி எல்லாமே ஆங்கிலமாக இருக்குமா ?



தமிழ் மட்டுமே தெரிந்தவர்களும் இன்று சி.ஏவில் வெற்றி பெற்றுள்ளனர். இதே போல மலையாளம் , தெலுங்கு , இந்தி மொழி மட்டும் தெரிந்தவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.



கணக்கில் அபரிமித அறிவு உள்ளவர்கள் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்கிறார்களே?



இது தவறான எண்ணம். கணக்கில் சுமாரானவர்கள் ,



அக்கவுண்டன்சி தெரியாதவர்கள் கூட சரியான பயிற்சியுடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும்.



இதற்கு அதிகம் செலவாகுமா ?



மெடிக்கல் என்று போனால் குறைந்தது 25 முதல் 50 லட்சம் செலவாகும்.



சிஏக் கு அதிகபட்சம் ஒன்றரை லட்சம் தான் செலவாகும். மூன்றாவது நிலையில் உதவியாளராகப் பயிற்சி பெறும் போதே ஆடிட்டர் உதவித் தொகை வர ஆரம்பித்து விடும். எனவே அதிக செலவு என்பதற்கு இதில் இடமே இல்லை.



இதற்குரிய வேலை வாய்ப்பு எதிர்காலம் எப்படி ?



ஒவ்வொரு படிப்பிலும் வேலை வாய்ப்பின் தேவைக்கு அதிகமாகவே படித்தவர்கள் உள்ளனர். இதில் நம் நாட்டில் 9 லட்சம் பேர் தேவை. ஆனால் இருப்பதோ இரண்டரை லட்சம் பேர் தான் அவ்வளவு தேவை உள்ளது .



இப்போது நம் நாட்டில் ஜி. எஸ்.டி. வந்த பிறகு எல்லாமே வரிக்குட்பட்ட வட்டத்திற்குள் வந்து விட்டதால் சிஏ படித்த ஆடிட்டர்களின் தேவை அபரிமிதமாக உள்ளது.



எனவே எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது.



நீங்கள் நடத்தும் இந்த இலவச கலந்தாய்வின் நோக்கம் என்ன?



நானும் பல மனத்தடைகளைக் கடந்த பின்புதான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். இது பற்றி பெற்றோரிடம் மாணவர்களிடம் சரியான புரிதல் இல்லை. நிறைய குழப்பங்கள் , தவறான கணிப்புகள் , சந்தேகங்கள் , மாயைகள் ,தவறான அச்சங்கள் உள்ளன.



அவை தேவை இல்லாதவை என்று எடுத்துச் சொல்லி உணர வைக்கவே இந்த கூட்டத்தை நடத்தி தெளிவு படுத்துகிறோம்.



இப்போது நடக்கும் கலந்தாய்வு நிகழ்ச்சி பற்றி?



இந்த பயிற்சி நிறுவனம் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் இந்த பட்டயக் கல்வி தொடர்பான இலவச கலந்தாய்வு கூட்டமொன்றை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 28 1 2018 தேதி இன்று சென்னை ஆலிவர் சாலையில் அமைந்திருக்கும் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் உள்ள கலையரங்கில் காலை பத்து மணியளவில் நடைபெறுகிறது.



நிகழ்ச்சியில் என்ன சிறப்பம்சம்?



இந்த கூட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோர்களுக்கும், பட்டய கணக்காளர் கல்வி குறித்து மக்களிடமும் இருக்கும் தவறான நம்பிக்கைகளுக்கும் இத்துறையில் நெடிய அனுபவம் பெற்றவர்கள் விளக்கமளிக்கிறார்கள். அத்துடன் குறைந்த கட்டணத்துடன் அதிகளவில் வருவாய் ஈட்டக்கூடியக் கல்வி வாய்ப்பாக பட்டய கணக்காளர் கல்வி இருக்கிறது என்பது குறித்த விழிப்புணர்வு ஊட்டும் விரிவுரையும் இடம்பெறுகிறது.



இது குறித்து இந்த இலவசக் கலந்தாய்வு கூட்டத்தை நானே முன்னின்று நடத்தி, தெளிவுரை ஆற்றவுள்ளேன்.



உங்கள் பயிற்சி மையம் பற்றி ?



ஸ்ரீசங்கரா கோச்சிங் சென்டர் 1979 ஆம் ஆண்டில் காஞ்சி மஹாபெரியவர் அவர்களின் ஆசியுடன் மாணவர்களின் நலன்களுக்காக தொடங்கப்பட்டது. இங்கு பட்டய கணக்காளர் கல்விக்கான பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறோம். ஃபவுண்டேசன், இண்டர்மீடியட், ஃபைனல் என மூன்று நிலைகளில் இந்த பயிற்சி வகுப்பு நடை பெறுகிறது.இந்த சென்டரில் இதுவரை 3, 70,000க்கும் மேற்பட்டவர்கள் படித்திருக்கிறார்கள். இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பட்டய கணக்காளர்களாகி இருக்கிறார்கள். ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் உள்ள முதன்மையான நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள்.



அத்துடன் மத்திய அரசு தற்போது நடைமுறைப்படுத்தியிருக்கும் ஜி எஸ் டி வரிவிதிப்பிற்கு பிறகு பட்டய கணக்காளர் கல்விக்கான பாடதிட்டமும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.



இந்த படிப்பை யார் படிக்கலாம்? இதற்கு என்ன கல்வி தகுதி வேண்டும்? வயது வரம்பு இருக்கிறதா? படித்து முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? கட்டணம் எவ்வளவு ஆகும்? தேர்வு முறை எப்படியிருக்கும்? படிப்பை முடித்த பிறகு வேலை வாய்ப்பு எப்படி இருக்கிறது? எவ்வளவு ஊதியம் கிடைக்கும்? வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி சாத்தியப்படும்? என்பது போன்ற பல வினாக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.



விருப்பமுடையவர்கள், ஆர்வமுடையவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் இதில் கலந்து கொள்ளலாம். ஸ்ரீ சங்கரா கோச்சிங் சென்டரை முன்னெடுத்து திரு நிரஞ்சனும் திருமதி நிரஞ்சனும் சிறப்பான ஆசிரியர்களைக் கொண்டு வழி நடத்தி வருகிறார்கள்.

Saturday, January 27, 2018

Maamanithan gets the due accredition with Maestro Ilayaraja

Music composer Yuvan Shankar Raja has donned the hat of being a producer with his maiden film titled Pyar Prema Kadhal,starring Harish Kalyan and Raiza. Directed by Ilan this film has music composed by Yuvan himself. Being shot in a rapid pace this film of romantic ingredients is all set for a summer release.



Following this Yuvan under his YSR productions announced his second project with the most happening Vijay Sethupathy and Director Seenu Ramasamy in the helm as a director. Titled Maamanithan this film is said to be filled with emotion and Drama. The film has now got a major boost with the arrival of Maestro Ilayaraja in the arena as a music director.



"In this day when the great man has been conferred "Padma Vibushan " by the Goverment of India, we are glad to announce the inclusion of the maestro in our project. The title "Maamanithan" gets a meaning now. Beyond being his son i attach a lot of pride in being his fan too. I have learnt the art of music from him, previlaged enough to learn it from the close circuit being his son. Now as a producer my heart is filled with joy having him on board. The very thought of co -composing with him and my brother Karthik Raja makes my journey of being a music director more meaningful and purposeful" said Yuvan Shankar Raja with joy.

ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை தமிழக ஆளுநர் பார்வையிடுகிறார்!

ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை தமிழக ஆளுநர் பார்வையிடுகிறார்!
நாளை 27.01.2018 காலை 11.30 க்கு வருகை தருகிறார்!!



செய்தியாளர்களை வருக வருக என அழைக்கிறோம்!!!



இடம்: வேளச்சேரி குருநானக் கல்லூரி



ஆழ்வார் குறிச்சி ஜீயர் அவர்கள் 26.01.2018 அன்று கண்காட்சி வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியை இத்துடன் இணைத்துள்ளேன்.



இதனை தங்கள் ஊடகத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.




நன்றி:
ஆறு.அண்ணல், செய்தித் தொடர்பாளர் செல்: 93810 39035

Republic Day celebrated by a innovative way at Lord Sri Yoga Anjenayar Temple

Republic  Day got celebrated by a innovative way  at Yoga Anjenayar Temple, Chrompet, Chennai 600 044.

Alangaram of Lord Sri Yoga Anjenayar  with our National flag all round him.

Sri Raghavan  Bhattar Swamy  who has done  this excellent Alangaram.

Devotees have gathered yesterday on this occasion to enjoy this fabulous Republic Day Alangaram  and to get the blessings of Lord Sri Yoga Anjenayar.

T Raghavan

Friday, January 26, 2018

One day Training Program on Organic Farming in Anna University

As Agriculture is the backbone of our country’s economy & the conditions are leading to exodus of youth from villages not involving themselves in the farming, it is imminent that our young students are to be encouraged to undertake the farming with a special focus. In this regard Society of Agricultural & Irrigation Engineering [SAIE], Centre for Water Resources [CWR] supported by Centre for Entrepreneurship Development [CED] of Anna University has taken up a socially relevant entity of “Creating Student Entrepreneurs through Organic Farming”. The students of Anna University main campus are carrying out Organic Farming in 1.5 acre of land allotted within the campus.

Consequently, the one-day Training Program on “ORGANIC FARMINTG” is organized as part of KRISHI-2018, an intra collegiate program of Society of Agricultural and irrigation Engg students of Anna University. The Program focuses mainly on reaching out to the students and urban community to understand the difficulties faced by our farmers and to really make a difference in the field of agriculture.



Lectures and Live Demonstration



The world now understands the real meaning of Organic Farming explained by Mr.Jagan, Nallakeerai. The new concept on “Intellectual Farming” was briefed by Mr.Bhupesh Nagarajan, Chairman, Indira Group of Companies. Money is a matter for all and so in Agriculture. The solutions for problems in Marketing & promoting Agricultural products was detailed by Dr.Dakshayani, Green Signal Biopharma. Is it possible to do Agriculture in Urban areas? Yes, the answer is Roof-Top Gardening and the experience is shared by Ms. Archana Stalin, My Harvest. Everyone can be a Boss. Entrepreneural oppurtunities in Agricultural sector was defined by Ms.Jaishree Krishnan, D’Organica. Er.P.Ravichandran, Senior Engineer of TN Agri Engg Dept explained the Entrepreneurial opportunities in Organic Farming. Field Demonstrations are to be made to educate th participants in creating organic fertilizers and pesticides including vermicomposite.



Indira Agrotech & Uzhave Thalai Foundation will be supporting CED in implementing the Model Farm in 1.5 acres. They have come forward to create awareness on organic agricultural practices, to create and practice intellectual farming techniques by joining hands with Anna University. It will be an initiative to create a benchmark in Eco-tourism. We request you to kindly publish/telecast in your esteemed Newspaper/Television for the information of the Public.

கதிர் - சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ சத்ரு “

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “



இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.



ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.



ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி



இசை - அம்ரிஷ்



பாடல்கள் - கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ



எடிட்டிங் - பிரசன்னா.ஜி.கே



கலை - ராஜா மோகன்



ஸ்டன்ட் - விக்கி



கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நவீன் நஞ்சுண்டான்



இந்த படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்...



இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்



தான் இந்த படம்.



இந்த படத்தின் MOTION போஸ்டரை இயக்குனர் கெளதம்மேனன் வெளியிட்டார். படம் விரைவில் வெளியாக உள்ளது.

Shankar's updates on 2.0 and Indian 2

Director Shankar, who is almost done with Superstar Rajinikanth's 2.0 and will soon start Indian 2 with Kamal Haasan, has come up with updates on both the flicks.



"Hi Everyone, Happy Republic Day. The teaser work of 2.0 is going in full swing at Mobscene, LA," the 'mega director' posted on his microblogging page on Friday.



The Sivaji and Enthiran maker added: "It involves lot of CG, so once it is done the teaser will be released."



On Indian 2, he uploaded a video, in which a flying balloon said 'Indian 2 in Taiwan'.



Recently, veteran writer Jeyamohan, who has worked in 2.0 and has also been roped in for Vijay-A R Murugadoss movie, has confimed working for Indian 2.



Jeyamohan said, “I was actually approached for this film two years back. I can confirm that work is happening for the film at a brisk pace.”



It may be recalled that Jeyamohan has written the dialogues for Kamal’s Papanasam as well, a few years ago.