Thursday, July 27, 2017

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் சஹஸ்ர சண்டி யாகத்தில் ராகு & கேது பெயர்ச்சி யாகம் வாஸ்து ஹோமம் நடைபெற்றது.



வேலூருக்கு அருகே வாலாஜாவில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம். இந்த பீடத்தை ஒரு வாழ்வியல் மையம், மனக் குறை தீர்க்கும் மையம் என்றே பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு இங்கு வந்து செல்லும் அனைவரும் ஸ்ரீதன்வந்திரி பகவானின் அருளாலும், டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசியாலும் பலன் அடைகிறார்கள். வைத்தியத் துறையின் தந்தையான ஸ்ரீதன்வந்திரி பகவான் அருளும் இந்த ஆரோக்ய பீடத்தில் 73க்கு மேற்பட்ட திருச்சந்நிதிகள் உள்ளன.

அவற்றுள் ராகு & கேது சந்நிதியும் சிறப்பான ஒன்று. ‘ஏக சரீர ராகு & கேது-வாக தரிசனம் தரும் இந்த ராகு & கேது விக்கிரகத்தின் தலைப் பகுதி ராகுவாகவும், உடல் பகுதி கேதுவாகவும் அமைந்துள்ளது.

ராகு கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்கு தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள். குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மா வள்ளல் ராகு பகவான். ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர்.

பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருப்பவரைத் திடீரென கோடீஸ்வரர் ஆக்குபவரும் ராகு. கெட்ட சகவாசங்களுக்கும் காரணம் ராகுவே! ஞானம், மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேது பகவான். கல்வி அறிவு, கேள்வி ஞானம் அருள்பவர். தோல் வியாதி, வாயுத் தொல்லை, வயிற்று வலி உட்பட பல வியாதிகளினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கேது பகவானுக்குப் பரிகாரம் செய்து பாதிப்பில் இருந்து மீளலாம்.

ராகு & கேது பெயர்ச்சி இன்று 27.07.2017 வியாழன் சிம்மம் ராசியிலிருந்து இருந்து கடகராசிக்கு ராகு மாறுகிறார். கேதுவானவர் கும்பத்திலிருந்து மகரத்திற்கு இடப்பெயர்சி செய்கிறார்

அடுத்த ஒண்ணரை வருட காலத்துக்கு இவர்கள் இந்த ராசியிலேயே இருப்பார்கள். இந்தக் காலத்தில் அவரவர் தசாபுக்திக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் தருவார்கள்.

தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ராகுகேது யாகமும் சிறப்பு அபிஷேகமும்.‘ராகு & கேது பெயர்ச்சி’ விமரிசையாக இன்று 27.07.2017 வியாழக் கிழமை காலை கோ பூஜை, கணபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் 10.00 மணி முதல் 12.00 மணி வரை 1000 சண்டி யாகத்துடன் வாஸ்து ஹோமமும் நடைபெற்றது. இதில் மேஷம், மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், போன்றராசிக்காரர்களும் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் பரிகாரங்கள் செய்து கொண்டு பலன் பெற்றனர்.
இந்த யாகத்தில் திருமணத் தடை, உத்தியோகம் இன்மை, அயல்நாட்டுப் பயணம் தடைபடுதல், குழந்தைப் பேறின்மை, தம்பதிக்குள் ஒற்றுமை மிகுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு தேவைகளுக்கு இந்தப் பெயர்ச்சியில் கலந்து கொண்டு பிரார்த்தினை செய்தனர்.

நிறைவாக ஸ்ரீ இராகு கேது பகவானுக்கு சிற்ப்பு பாலபிஷேகமும் மஞ்சளபிஷேகமும் ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு மஹா அபிஷேகமும் நடைபெற்று இறை பிரசாதம் வழங்கபட்டது. இதில் டாக்டர் குழந்தைவேல், ஆர்காடு தொழில் அதிபர் திரு ஜெ.லக்ஷ்மணன், பென்ஸ் பாண்டியன், சோளிங்கர் ஏ.எல் சாமி, காஞ்சீபுரம் பாலு சாஸ்திரி மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். சஹஸ்ர சண்டி யாகத்த்துடன் நடைபெற்ற இராகு கேது பெயர்ச்சி யாகம் வாஸ்து யாகத்திலும் கலந்து கொண்ட் பக்தர்கள் பெரும் பாக்யமாக கருதினர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தினர்.

No comments:

Post a Comment